උණුසුම් පුවත්

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அனைத்து முஸ்லிம்களின் சடலங்களையும் புதைக்க பசில் உத்தரவு

Spread the love

 

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பசில் ராஜபக்ஷ எடுக்கும் தீர்மானங்கள் முழு நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. திடீரென சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய விசேட நிபுணர்கள் சிலரை அழைத்த பசில் ராஜபக்ஷ தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழந்து குவிந்துக் கிடக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது உறவினர்கள் ஊடாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் விசேட வர்த்தமானி வௌியிட்டு இந்த விடயத்தை பகிரங்கப்படுத்த இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. இலங்கையில் அனைத்து தீர்மானங்களையும் எடுப்பது பசில் ராஜபக்ஷ என்பது இதன்மூலம் தெரியவருகிறது. நாட்டில் எப்பாகத்திலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு இதன்மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. ஏனைய கொரோனா மரணங்களை எரிப்பதற்கு சுகாதார பிரிவினருக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.     
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச

 


Spread the love

Leave a Comment

You may also like