උණුසුම් පුවත්

சட்டமா அதிபர் தப்புல மற்றும் செயலர் நிசாரா இருவரின் ஆடை வத்தளையில் அவிழ்ந்தது – செயலர் நிராசாவின் கோரிக்கை புறக்கணிப்பு, பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பு சட்டத்தரணிகளை நீதிமன்றம் ஏற்பு. (வீடியோ இணைப்பு)

Spread the love

 சட்டமா அதிபர் தப்புலவின் நெருங்கிய உறவு செயலர் நிராசாவின் கோரிக்கை துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கைதிகளின் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளை நிராகரிக்குமாறு அமைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்த உலகின் முதலாவது வீணாபோன சட்டமா அதிபர் தப்புலவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் முதுகெலும்பு உள்ள நபர்கள் இருப்பது இன்று உறுதியானது. அது வத்தளை பிரதான நீதவான் ராகல ஆவார். அவருக்கு நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மஹர சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சட்ட மா அதிபர் சார்பில் அவரது நெருங்கிய உறவு செயலராக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் நிராசா ஜெயரட்ன முன்னிலையானார். ஜனநாயக நாட்டில் பாதிக்கப்படும் தரப்பு தமக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தை நாட முடியும் என்பதை நிராசா அறிந்து வைத்திருக்கவில்லை என்பதை நாம் அறியோம். அரசியல் யாப்பின் பிரகாரம் தனக்குத் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தரணிகளின் உதவியை நாட முடியும் என்பது அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாத நிராசா ஜயரட்ன நாட்டின் சட்டத்தை ஜயரடன் மலர்சாலைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முயற்சித்த பல சந்தர்ப்பங்களை நாட்டு மக்கள் அண்மையில் கண்டுகொண்டனர். ஆனால் அதனை முறியடிக்கும் வகையில் சட்ட ரீதியான வரலாற்று தீர்ப்பு ஒன்றை வத்தளை நீதவான் ராகல இன்று வழங்கினார். மஹர சிறை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணிகளுக்கு இடமளித்து அவர்களை ஏற்றுக் கொள்வதாக நீதவான் தீர்ப்பளித்தார். இதன் மூலம் நாட்டு மக்கள் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறியளவேனும் காப்பாற்றப்பட்டது. நிராசா ஜயரட்ன என்ற முட்டாள் பெண்மணி தப்புலவின் நிழல் குரல் என்பதை நாம் அறிவோம். தப்புலவின் ஒரே நோக்கம் ராஜபக்ஷ நீதிமன்றின் பிரதம நீதியரசராக பதவி பெற வேண்டும் என்பதாகும். அதற்கென அவர் எந்தவொரு குப்பை வேலைகளையும் சட்ட ரீதியாக செய்ய தயார் நிலையில் உள்ளார்.

லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச

Spread the love

Leave a Comment

You may also like