Uncategorized @ta

யாரும் எதிர்பார்த்திராத அதிகார மாற்றம் விரைவில்.

Spread the love

 மஹிந்த ராஜபக்ஷவின் முதுகின் மேல் ஏறியே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் எதிர்பார்க்காத படி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாக தனது இராணுவ குழுவினரை அரச நிர்வாகம், சுகாதாரத்துறை கல்வி, வெளிநாட்டு சேவை மற்றும் அரசியலில் ஈடுபடுத்தி உள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ள அணியினர் பல வகையிலும் கோட்டாபயவிற்கு எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். ருவான்வெலிசாயவில் சத்தியப்பிரமாணம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற கோட்டாபய ராஜபக்ஷ தவறியுள்ளார். அதனால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக யாரேனும் இருந்தால் அவரது வாக்களித்த குடும்ப உறவினர்களாகவே அவர்கள் இருப்பர். ஏனைய அனைவரும் அவரை வெறுத்துவிட்டனர்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் ராஜபக்ஷக்கள் பாரிய எதிர்ப்புக்களை சந்தித்து வருகின்றனர். அதனால் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு அழுத்தங்கள் காரணமாக விரைவில் அதிகார மாற்றம் ஒன்று இடம்பெற வாய்ப்பு உள்ளதென எமக்கு தகவல் வழங்குவோர் தெரிவிக்கின்றனர்.
 லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
 
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச

Spread the love

Leave a Comment

You may also like