இன்னும் ஓரிரு தினங்களுக்குள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவின் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி அறிவிப்பு விடுக்க உள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற இரவு நேர இரகசிய சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை வளங்களை வௌிநாட்டிற்கு விற்பது அல்லது குத்தகைக்கு கொடுப்பது தனது கொள்கை அல்ல எனவும் விரைவில் உள்நாட்டு வியாபாரிகளை அழைத்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அறிவிப்பு விடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இது நாட்டு மக்களை முட்டாளாக்கி விளையாடும் விளையாட்டாகும். அண்மையில் இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்து 10 பில்லியன் ரூபா லாபம் பெற்ற வில்மா நிறுவன உரிமையாளர் சஜாத் மவுசுன் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்திற்கு
sajad mawzoon உள்நாட்டு வியாபாரியாக முதலீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சஜாத் மவுசுன் இந்தியாவின் அதானி நிறுவனத்தில் இலங்கை பிரதிநிதி என்பதை பொறுப்புடன் கூறக் கொள்ள விரும்புகிறோம். ராஜபக்ஷ குடும்பத்தின் மிக நெருங்கிய வர்த்தக நண்பர் இவர். சஜாத் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதற்கான சான்றுகளும் எம்மிடம் உள்ளன. அதனால் இவருக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் எழுப்பாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இராணுவ தலைமையகம் அமைந்திருந்த இடத்தை சஜாத்திற்கு சொந்தமான வில்மா நிறுவனம் ஊடாகவே விற்பனை செய்தனர். அந்த இடத்தில்தான் ஷெங்ரிலா ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோட்டாபயவிற்கு கொமிஷன் பணம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி பேச்சுவார்த்தையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை (East Terminal ) தேசிய வியாபாரி ஒருவரின் முதலீட்டில் 49%ற்கு 51% என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியாவும் இணங்கியுள்ளதென தெரியவருகிறது. ஏதேனும் ஒரு அடிப்படையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க இலங்கை தவறினால் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான அனைத்து இரகசியங்களையும் வௌிப்படுத்துவதாக இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால் தனது நெருங்கிய குடும்ப நண்பருக்கு தேசிய வியாபாரி என்ற அடிப்படையில் கிழக்கு முனையத்தை வழங்கி இந்தியாவின் கரங்களுக்கு அது சென்றடையும் வகையில் செயற்பட கோட்டாபய ராஜபக்ஷ தனது போலி தேசபக்தியை கொண்டு செயற்படுவார் என்பது உறுதி.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச