தற்போதைய தலைவரின் தான்தோன்றித்தனமான செலவுகள் காரணமாக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவும் வங்கிக் கடன் பெற வேண்டிய நிலைக்கு சென்றுள்ள டெலிகொம் நிறுவனத்தின் புதிய சின்னம் அறிமுகம் என்ற பெயரில் ஊடகங்களுக்கு கோடிக் கணக்கான விளம்பரங்களை வழங்க நிறுவனத் தலைவர் ஆரம்பித்துள்ளார்.
புதிய சின்னத்தை தயாரிக்கவும் அதிகளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சரினால் தேசிய விளையாட்டுக் குழுவின் உறுப்பினராக ரொஹான் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராகும் கனவில் உள்ள ரொஹான் தற்போதைய ஒலிம்பிக் குழு தலைவருக்கு எதிராக செயற்பட சேவ் த ஸ்போட்ஸ் எனும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடக மற்றும் விளம்பர விடயங்களை ரொஹானின் மனைவி வருணி அமுனுகம பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஒலிம்பிக் குழு தேர்வு தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரொஹான் பெனாண்டோ சக போட்டியாளரான சுரேஸ் சுப்ரமணியத்திடம் தோல்வி கண்டார். வருணியின் உதவியில் திலித்தின் அருண பத்திரிகையில் கடந்த வாரம் தற்போதைய ஒலிம்பிக் குழுவிற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையை ரொஹான் ஆரம்பித்துள்ளார்.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச