அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரச புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் இரகசியமான அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பார்த்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சி ஹேவாவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்ற இரண்டு ஆணையாளர்களும் அழைக்கப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு பிரதானிகளுடன் விசேட இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஆனால் அந்த நிலைமை கடைசி வரை குறிப்பிடப்படாமல் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியும் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாகாணசபை அல்லது உள்ளாட்சி சபை தேர்தல் நடத்தப்படக்கூடாது என உறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது பாதுகாப்பு புலனாய்வு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடந்தால், பாரம்பரிய அரசியல் பாதையை தாண்டி நாடு நகரும் சாத்தியம் இருப்பதாக அரச உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, ராஜபக்ஷ திருடர்களும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மாபியாக்களும் பீதியில் உள்ளனர் என சேவையில் உள்ள பாதுகாப்பு பிரதானிகள் தெரிவித்தனர்.