நல்லாட்சி அரசாங்கத்தில் நன்கு திண்று குடித்து உழைத்து பிரபலமாக இருந்து பின் தாமரை மொட்டு கட்சிக்கு பல்டி அடித்து மாறிய பின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் தேயிலை தோட்டங்கள் ஊடாக செய்த பண மோசடி குற்றங்களில் இருந்து விடுதலையாகியுள்ள ரொஹான் பெனாண்டோ, கோட்டாவின் வியத்மக ஊடாக தனது மனைவியின் (இரண்டாவதா அல்லது மூன்றாவதா என தெரியாது) ட்ரை எட் நிறுவனம் ஊடாகவும் டெலிகொம் நிறுவனத்தில் பணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல நபராக ஒரு காலத்தில் இருந்து வந்த ரொஹான் பெனாண்டோ அங்கிருந்த அமைச்சர்கள் ஊடாக பல வழிகளிலும் பணக் கொள்ளையில் ஈடுபட்டு தீடிரென வியத்மக அணியில் இணைந்து தற்போது கோட்டாபயவின் நெருங்கிய நண்பராக செயற்படுகிறார். இவர் அண்மையில் நத்தார் பண்டிகை கொண்டாட்டத்திற்கு நாளாந்தம் 375000 ரூபாவை வீண் செலவு செய்துள்ளார். அப்பாவி நாட்டு மக்களின் வரி பணத்தை இவ்வாறு வீணடித்து வருவதில் இவர் கைதேர்ந்தவர். தமது குடும்ப சொத்தாக நினைத்து இவ்வாறு நடந்து கொள்கிறார். அதனால் டெலிகொம் நிறுவனத்திற்கு  இன்று ஏற்பட்டுள்ள நிலை மிகவும் ஆபத்தானது.
டெலிகொம் நிறுவனம் என்பது நாட்டு மக்களின் சொத்தே தவிர ரொஹான் பெனாண்டோ அல்லது அவரது மனைவி, குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு 375000 ரூபா பணம் செலவிட்டு மின் அலங்காரத்தில் நத்தார் பண்டிகை கொண்டாடிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
 “இம்முறை நத்தார் பண்டிகையை அமைதியாகவும் ஆரவாரம் இன்றியும் கொண்டாடுமாறு கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார். ஆனால் அதனை மீறி அநாவசிய செலவில் மின்சாரத்தை வீண் விரயம் செய்து வரும் ரொஹான் பெனாண்டோவினால் ஏற்பட்ட அநியாய செலவை நாட்டு மக்களே திருப்பிச் செலுத்த நேரிடும். இதனை நாட்டு மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.”
 இந்நிலையில் ஊழியர்களை அச்சுறுத்தி “அடோ கோட்டாவை நாங்கள் தான் கொண்டுவந்தோம். நாம் வேண்டியதை செய்வோம்.”..என்று சண்டித்தனம் செய்யும் ரொஹான் போன்ற நபர்களால் “சேர்” நாளுக்கு நாள் குழியிலே தள்ளப்படுவது உறுதி”
கோட்டாபய ராஜபக்ஷ இனிவாவது தன்னை காப்பாற்றிக் கொள்ள ரொஹான் போன்ற திருடர் கூட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஊழல் அற்ற நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் மூடிக்கிடக்கும் இந்த தருணத்தில் ரொஹான் பெனாண்டோ போன்றவர்கள் ஜனாதிபதியின் பெயரை விற்று பணக்கொள்ளையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். நத்தார் கொண்டாட்டத்திற்கு அதிக செலவில் அழைப்பிதழும் அச்சிட்டு குடும்ப உறுப்பினர்களை அழைத்து ரொஹான் பெனாண்டோ அடிக்கும் இந்த கூத்தின் மூலம் நாட்டு மக்களின் வரிப்பணம் நாசமாக்கப்படுவதை பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகிறோம். இவ்வாறான மோசடிக்காரர்கள் இருக்கும் வரை இலங்கை நாட்டுக்கு எதிர்காலமே கிடையாது.                           
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
 
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.