இலங்கையை ராஜபக்ஷக்கள் சீனாவிற்கு பிரித்து பிரித்து விற்பனை செய்துள்ளார்கள் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அன்று நாட்டை துண்டு துண்டாக விற்பனை செய்யும் போது கண் வாய் மூடி அமைதி காத்து வந்த மெதகொட அபயதிஸ்ஸ, முருந்தெட்டுவே ஆனந்த, எல்லே குணவன்ச, பெங்கமுவே நாலக்க போன்ற தேரர்கள் இன்று ராஜபக்ஷக்களுக்கு எதிராக குரல் கொடுப்பது சீனாவிற்கும் ராஜபக்ஷக்களுக்கும் உள்ள நகமும் சதையும் உறவை அறிந்து கொண்டா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
காரணம் நாட்டின் இராணுவ தலைமையகத்தை 99 வருடம் குத்தகைக்கு வழங்கி அந்த இடத்தில் sangilla ஹோட்டல் கட்டியபோது இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்ததை நாம் அறிவோம். ஆனால் இவர்கள் வாய் திறக்கவில்லை. சீனாவின் பணம் அன்று விளையாடியதையும் நாம் அறிவோம். எனவே இன்னும் ராஜபக்ஷக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்த பிக்குகள் செயற்படுகிறார்கள் என்பது எமது நம்பிக்கை.
துறைமுக கிழக்கு முனையம் எந்தவொரு நாட்டிற்கும் நிறுவனத்திற்மும் விற்கவோ குத்தகைக்கோ, முதலீடு செய்யவோ, வியாபாரத்திற்கோ வழங்க கூடாது. அதனை அபிவிருத்தி செய்யக்கூடிய அனைத்து தகுதிகளும் துறைமுகத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே அதனை நாட்டின் சொத்தாக பொருளாதார மத்திய நிலையமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமளில்லை.
நாட்டின் சொத்துக்களை காணிகளை யுத்தம் என்ற போர்வையில் விற்பனை செய்ய  ராஜபக்ஷக்கள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது இந்த தேரர்கள் வாய் திறக்கவில்லை. அதனால் தற்போது துறைமுக விடயத்தில் மெதகொட அபயதிஸ்ஸ, முருந்தெட்டுவே ஆனந்த, எல்லே குணவன்ச, பெங்கமுவே நாலக்க தேரர்கள் தடுமாறுவது எதற்காக என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
ஆனால் எமக்கு கிடைக்கும் தகவல்கள் படி இவர்களை இயக்குவது கோட்டாபய ராஜபக்ஷ குழு என்பதை கூறி வைக்க விரும்புகிறோம். உள்நாட்டு வியாபாரி ஒருவரின் தோல் மேல் ஏற்றி கிழக்கு முனையத்தை வேறு நாட்டுக்கு வழங்கும் திட்டத்தில் இவர்கள் உள்ளனர். நாட்டின் சொத்துக்களை எந்தவொரு விதத்திலும் விற்பனை செய்யாதிருக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் அதில் இடம்பெறும் மறைமுக நிகழ்ச்சி நிரல்களை வௌிகொண்டுவர நாம் எப்போதும் மக்கள் ஊடகம் என்ற அடிப்படையில் தயார் நிலையில் உள்ளோம்.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.