கடந்த ஒன்பது மாதங்களில் ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் 7 கோடி ரூபா லாபத்தை பெற்ற போதும் ஊழியர்களுக்கான டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கி இலங்கை வங்கியில் தனியாக கடன் பெற்று சம்பளம் வழங்கிய விடயத்தை நாம் ஏற்கனவே வௌியிட்டிருந்தோம். டெலிகொம் சின்னத்தை மாற்றி அமைத்த விடயத்திலும் ரொஹான் பெனாண்டோவிற்கு கொமிசன் பணம் கிடைத்ததை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம். இவர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்தே பணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நிறத்தை மாற்றி அதே பணக் கொள்ளையை தடையின்றி முன்னெடுத்து செல்கிறார். ஆனால் டெலிகொம் நிறுவனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட நாம் அனுமதி அளிக்க மாட்டோம். காரணம் டெலிகொம் ஊழியர்கள் வியர்வை சிந்தி பெற்றுக கொடுக்கும் லாபத்திற்கு சீரழிவு ஏற்படக் கூடாது.
ஆனாலும் ரொஹான் போன்றவர்களுக்கு கொள்ளையடிக்கும் பணத் தாளின் வாசம் மட்டுமே தெரியும். டெலிகொம் தலைவர் ரொஹான் பெனாண்டோவின் அலுவலக மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இதுவரை 3 கோடி ரூபா செலவு செய்ய திட்டதிட்டு சுவர்களுக்கு விலைமதிப்பு வாய்ந்த கும்பக் மரப்பலகை பொருத்தப்பட்டு 85 அடி அகலம் கொண்ட திரையொன்று சுவரில் இணைக்கப்பட்டு அநியாய செலவு செய்யப்பட்டு வருகிறது. டெலிகொம் என்பது மனைவி வருணியிடம் இருந்து கிடைத்த வீட்டுச் சொத்து என ரொஹான் பெனாண்டோ நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரையில் சுமார் 100 மில்லியன் வரை தெரண நிறுவனத்திற்கு விளம்பரம் வழங்கி மறுபக்கத்தில் டெலிகொம் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளதாக எமக்கு தெரிய வந்துள்ளது.
 தற்போது அதிசொகுசு நிலையில் காணப்பட்ட டெலிகொம் தலைவரின் boardroom பகுதியை மாற்றி அமைத்து வீண் செலவு செய்து வருகிறார் அதன் தலைவர். சுவரில் பொருத்துவதற்கு 85 அடி அகலம் கொண்ட தொலைக்காட்சி கொள்வனவு செய்துள்ளனர். இதற்கு செலவாகும் பெருந்தாகை பணம் நாட்டு மக்களின் பில்களில் இருந்து அறவிடப்படுமே தவிர வருணியின் தந்தையினது வீட்டு சொத்தில் இருந்து அறவிடப்பட மாட்டாது என்பதை ரொஹான் பெனாண்டோவிற்கு கோட்டாபய ராஜபக்ஷ கூறி வைக்க வேண்டும்.  தேயிலை சபையில் இருந்த போது பாரிய அளவு பணக் கொள்ளையில் ஈடுபட்டதை தற்போது தேயிலை சபை தலைவரே வௌிப்படுத்தி உள்ளார்.
கோட்டாபயவின் வியத்மக அமைச்சின் ஊடாகவே டெலிகொம் நிறுவன தலைவராக ரொஹான் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மெலிகொம் நிறுவனம் நட்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள என்பதை பொறுப்புடன் நாம் கூறுகிறோம். இதனால் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.