கொழும்பில் காணப்படும் மிகவும் பெறுமதிவாய்ந்த இடங்களை சீனாவிற்கு வழங்க நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இணங்கியுள்ளது. அந்த வரிசையில் டெலிகொம் நிறுவனத் தலைவரை அழைத்து  பேசிய ஜனாதிபதி 2023ம் ஆண்டு ஆகும்போது டெலிகொம் கட்டிடம் உள்ள காணி அனைத்தையும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு வழங்கிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி பல வருடங்களாக telecom one to one call center 121 அலுவலக ஊழியர்களை அங்கிருந்து அகற்றி அங்குள்ள தொலைபேசி திருத்த பிரிவு, அவசர திருத்தப் பிரிவு போன்றவற்றை வெலிக்கடை பகுதிக்கு மாற்ற வேண்டும் என டெலிகொம் நிறுவன தலைவருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
telecom கட்டிடம் அமைந்துள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் பகுதியை கொழும்பு போர்ட் சிட்டியுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பிரதான பொருளாதார மத்திய நிலையமாக குறித்த காணி காணப்படுகிறது.
இலங்கையில் ஒரு அங்குல நிலம் கூட வௌிநாட்டவர்களுக்கு விற்கப்படாது என்று கூறிக் கொண்டே கோட்டாபய ஆட்சிக்கு வந்தார். வௌிநாட்டுக்கு விற்கப்பட்ட காணிகளை தாம் ஆட்சிக்கு வந்த பின் மீளப்பெறவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் மேடைகளில் தொண்டை கிழிய கத்தினார். ஆனால் இவை அனைத்தும் நாடகங்கள் என இலங்கை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். கோடிக் கணக்கில் செலவிட்டு டெலிகொம் கட்டிடத்தில் உள்ள கேபில்கள் அகற்றப்பட்டு வெலிக்கடை பகுதியில் பொருத்தப்பட வேண்டும் எனவும் இந்த மாற்றத்தின் ஊடாக சுமார் 500 பேர் வரை தொழில் இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லங்கா தவச அரசாங்கத்திற்கு விடுக்கும் சவால்……
இந்த டெலிகொம் காணியை சீன நிறுவனத்திற்கும் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த காணிகள் வௌிநாட்டுக்கு விற்கப்படுவதில்லை என்றால் அரசாங்கத்திற்கு நாம் சவால் விடுக்கிறோம். எழுத்து மூலம் அதனை உறுதிப்படுத்தவும்.  20வது திருத்தச் சட்டத்தில் கிடைத்துள்ள அதிகாரம் மூலம் கோட்டாபயவிற்கு அதனை செய்ய முடியும்.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.