பொல்கஸ்துவ ஆரன்ய சேனாசனவில் வசித்து வந்த ஓலந்து நாட்டின் அஜான் ஜினவன்சோ தேரர் இரண்டு மாதங்களுக்கு முன் கல்லால் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டார் என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஆனால் இந்த பிக்கு கொலை தொடர்பில் இலங்கை நாட்டின் ஏனைய பிக்குகள் அமைதிகாத்து வருவது கேவலமான விடயமாகும். இலங்கையில் அநேகமான பிக்குகள் அரசியல் வாதிகளின் மடியில் இருந்து கொண்டு வௌ்ளை ஆடைக்கு ஏமாந்து சலுகைகள் பதவிகளை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை துரதிஸ்டவசமே. டென்மார்க் நாட்டு பிரஜையான அஜான் ஜினவன்சோ தேரர்  பொல்கஸ்துவ ஆரன்ய சேனாசனவின் மிகவும் ஒழுக்கமுடைய பிக்கு ஆவார்.
ஆசிரமத்திற்கு அருகில் உள்ள பொல்கஸ்துவ வாவியில் போர்ட் சேவை மற்றும் கடல் விமான சேவை seaplanes என்பவற்றை சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வந்த நிலையில் அஜான் ஜினவன்சோ தேரர் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.
அஜான் ஜினவன்சோ தேரர் உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்னரே தற்கொலை என ஆனந்த சாகர தேரர் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் குறித்த தேரர் திட்டமிட்ட குழு ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாம் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். இந்த கொலை குறித்த குற்றச்சாட்டு அரசாங்கத்தின் பக்கம் திரும்ப வாய்ப்பு உள்ளதால் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து விசாரணைகளை செய்வதால் இது இலகுவான காரியமாக அமையும். அரசாங்கம் தற்போது கொலையாளிகளை காப்பாற்றுகிறது. அஜான் ஜினவன்சோ தேரரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறோம். பொல்கஸ்துவ ஆரன்ய சேனாசனவில் வசிக்கும் மற்றுமொரு தேரரான அமத்த தம்ம தேரரும் நாம் கூறுவதையே வலியுறுத்தி, அஜான் தேரரின் மரணம் திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ளார்.

லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.