யுக்ரேனில் அடையாளம் காணப்படும் அனைத்து கொரோனா தொற்றாளர்களும் உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
நிலைமை இவ்வாறு இருக்கையில் யுக்ரேனில் இருந்து நான்காம் கட்ட சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இந்த யுக்ரேன் சுற்றுலா பயணிகளின் இலங்கை விஜயத் திட்டத்திற்கு அரசாங்கம் இதுவரை 9 கோடி ரூபாவிற்கு அதிகம் செலவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன.
மேல் நீதிமன்றினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க என்ற ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரின் ஏற்பாட்டில் யுக்ரேன் நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டுள்ளனர். கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் பகுதிகளுக்குச் சென்று யுக்ரேன் சுற்றுலா பயணிகள் மீண்டும் ஹம்பாந்தோட்டைக்கு செல்ல உள்ளனர்.
 யுக்ரேன் சுற்றுலா பயணிகள் ஊடாக உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் இனி பரவக்கூடும் என கொழும்பு பிரதான வைத்திய அதிகாரி ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
 லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச [wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.