யுக்ரேனில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் உதயங்க வீரதுங்க தொடர்பில் கிடைத்துள்ள புதிய தகவல் என்னவென்றால், மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கிய யுக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணப் பொதிகள் பரிசோதனை செய்யாது விடுக்கும் அளவு சலுகை கிடைத்தது எவ்வாறு என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
பயணப் பொதிகள் பரிசோதனை செய்யப்படாத காரணத்தால் இலங்கை முகவர்கள் கொடுத்த அனுப்பி போதைப் பொருட்களை அவர்கள் தடையின்றி நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகிறது. முதல் சுற்றுலா அணி வந்த பின்னரே இலங்கை சுற்றுலா அதிகார சபைக்கு இவ்வாறான பயணிகள் வரும் விடயம் தெரியவந்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் மற்றும் கொரோனா தடுப்பு சட்ட விதிகள் எதனையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை என்பது விசேட அம்சமாகும். இவர்கள் யால சரணாலயம் மற்றும் கடற்கரைகளில் சுற்றித் திரியும் போதும் நாட்டில் இருந்து வௌியேறும் போதும் முகக்கவசம் அணிவதில்லை. இவர்களது சுற்றுலா வழிகாட்டியாக செயற்படும் உதயங்க வீரதுங்கவும் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணியாத சாதாரண மக்களை விரட்டி விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்யும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு இது கண்ணுக்குத் தெரிவதில்லை.  அத்துடன் 30 நாட்கள் விசாவில் இலங்கை வந்துள்ள யுக்ரேன் விபச்சார பெண்கள் எத்தனை பேர் நாடு திரும்பாமல் இங்கு தங்கி இருப்பார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேடிப் பார்ப்பதில்லை. உதயங்க தனது அரசியல் பலத்தைக் கொண்டு ஊடக சந்திப்பு நடத்துகிறார். கொரோனா தொற்று ஏற்படும் யுக்ரேன் பிரஜைகள் எங்கு சிகிச்சைப் பெறுகிறார்கள் என்பதை சாதாரண மக்கள் கொரோனாவில் பாதிக்கப்படும் போது அவர்களை விரட்டி விரட்டி வீடியோ எடுத்துக் காட்டும் திலித்தின் தெரண ஊடகத்திற்கும் தெரியாது. சுகாதார சேவை பணிப்பாளருக்கும் தெரியாது. இவை அனைத்தும் இரகசியமே.
 லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.