2019 ஒக்டோபர் 18ம் திகதி நாம் செய்தி ஒன்றை வௌியிட்டு கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்ற விசாரணை திணைக்களத்தால் அழைத்துச் செல்லப்பட்ட மாகந்துரே மதுஷை 19 அல்லது 20ம் திகதிகளில் சுட்டுக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக நாம் தகவல் வௌியிட்டிருந்தோம்.
நீதிமன்றில் இவ்வித முன்னறிவிப்பும் பெறாமல் பொலிஸ் மா அதிபரையும் ஏமாற்றி குற்ற விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாகந்துரே மதூஷை போதைப் பொருள் பிடிக்கவென வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்ததுடன் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளார்.
2019-10-20ம் திகதி அதிகாலை மதூஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். நாம் 18ம் திகதியே தேசபந்துவின் திட்டம் குறித்து முழு நாட்டுக்கும் உலகிற்கும் செய்தி வௌியிட்டோம். மதூஷ் கொலை செய்யப்பட பிரதான காரணம் நாட்டின் முக்கிய போதைப் பொருள் வியாபாரி என கருதப்படும் அமைச்சர் நிமல் லன்சா தொடர்பில் தகவல் வௌியிட்டதனால் என நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். சர்வதேச ஹெரோயின் விற்பனை முகவர்களில் லன்சாவும் ஒருவர் என மதூஸ் கூறியிருந்தார்.
மதூஷ் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டதன் பின் உடன் இயங்கிய தேசபந்து தென்னகோன் பொய் கடிதம் ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கி மதூஷின் கதையை முடிப்பதற்கு திட்டம் தீட்டினார்.
வெலிக்கடை சிறை கைதிகள் கொலை விவகாரத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியில் மதூஷ் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்தோம்.
ஆனால் பாதாள உலகக் குழுவினர் மாகந்துரே மதூஷை சுட்டுக் கொன்றதாக தேசபந்து தென்னகோன் கூறினார். சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
video..
துப்பாக்கிச்சூடு நடந்து ஒரு சில நிமிடங்களில் அவரது facebook தளத்தில் “மதுஷ் உனது இரத்தத்தின் சுவையை எனது நாக்கு கேட்கிறது..” என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து லங்கா தவச பிரதம ஆசிரியர் உடனே மனித உரிமை அமைப்புக்கு அறிவித்திருந்தார். மனித கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
 
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

By ajith

Leave a Reply

Your email address will not be published.